குளிக்க சென்றவரிடம் பணம் திருடியவர் கைது
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் ஆற்றங்கரையில் குளிக்க சென்றவரின் பணத்தை திருடிவரை காவல்துறையினர் கைது செய்தனர்
Update: 2024-01-01 02:30 GMT
நெல்லை விகேபுரத்தை சேர்ந்த இளமாறன் என்பவர் நேற்று முன்தினம் பாபநாசம் சிவன் கோவில் முன்புள்ள ஆற்றங்கரையில் குளிக்க சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த போது தன் சட்டை பையில் இருந்த 14700 ரூபாயை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரியின் அடிப்படையில் விகேபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு கிருஷ்ணன் என்பவரை நேற்று கைது செய்தனர்.