பணம் திருடியவர் கைது
ஏ.டி.எம்., கார்டை மாற்றி கொடுத்து பணம் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
Update: 2024-05-08 08:59 GMT
கள்ளக்குறிச்சியில் விவசாயிடம் ஏ.டி.எம்., கார்டை மாற்றிக் கொடுத்து, 80 ஆயிரம் ரூபாயை அபேஸ் செய்த பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி அடுத்த குதிரைச்சந்தலை சேர்ந்தவர் பெரியசாமி, 55; விவசாயி. இவர் கடந்த ஏப்., 1ம் தேதி காலை 11:30 மணியளவில், வங்கி கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை அறிய, கள்ளக்குறிச்சி ராஜா நகரில் உள்ள ஏ.டி.எம்., மையத்திற்கு சென்றார். அவருக்கு ஏ.டி.எம்., இயந்திரத்தை பயன்படுத்த தெரியாது என்பதால், அங்கிருந்த நபரிடம் தனது ஏ.டி.எம்., கார்டை கொடுத்து, பணம் எவ்வளவு இருக்கிறது என பார்க்கும்படி கூறினார். அந்த நபர் கார்டை மெஷினில் செலுத்தி பார்த்து விட்டு, பெரியசாமியிடம் ஏ.டி.எம்., கார்டை மாற்றிக் கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில் ஏ.டி.எம்., கார்டு மாறியது தெரியவந்தது. ஆனால், அதற்குள் பெரியசாமி வங்கி கணக்கில் இருந்து 80 ஆயிரம் ரூபாயை அந்த நபர் எடுத்திருந்தார். இது குறித்து நேற்று, பெரியசாமி அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து, சி.சி.டி.வி., கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர்.