கண்காணிப்பு வளையத்திற்க்குள் ரவுடிகள்
திண்டுக்கல் மாவட்ட ரவுடிகள் ஏ.பி.சி.டி. என தரம் வாரியாக பிரிக்கப்பட்டு காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் கண்காணிக்கப்படுகின்றனர்.
Update: 2024-05-27 06:25 GMT
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரவுடிகளின் பட்டியலை ஏ.பி.சி.டி. என தரம் வாரியாக பட்டியலிட்டு கண்காணிக்க தென் மண்டல ஐ.ஜி. கண்ணன் உத்தரவிட்டார். அதன்படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் மேற்பார்வையில் ரவுடிகள் அனைவரும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.