தண்ணீர் இன்றி தவிக்கும் குரங்குகள் - தண்ணீர் வைக்க கோரிக்கை !

ஏலகிரியில் கோடை வெயிலால் தண்ணீர் இன்றி தவிக்கும் குரங்குகள். தண்ணீர் வைக்க வனத்துறையினருக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Update: 2024-03-11 09:42 GMT
குரங்குகள்
 திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் ஏழைகளுக்கான ஊட்டி என்று அழைகப்படும் இந்த மலையில் ஆயிரக்கணக்கான குரங்குகள் இருக்கின்றன. கோடைக் காலங்கள் ஆனாலே தண்ணீர்ப் பஞ்சம் கடுமையாக நிலவுவதால் குரங்குகள் குடிக்கத் தண்ணீர் கிடைக்காமல் பரிதாபமாகச் செத்துமடிகின்றன. இதையறிந்த ஜோலார்பேட்டை சமூக ஆர்வலர்கள் மற்றும் வனத்துறையினர் ஏலகிரி மலையில் குரங்குகள் தண்ணீர் குடிக்க ஆங்காங்கே தொட்டி வைத்து தண்ணீர் நிரப்ப வழிவகை செய்தனர். ஆனால் தற்போது தண்ணீர் இல்லாமல் அந்த தொட்டிகள் மிகவும் காலியாக உள்ளது மேலும் என் காரணமாக குரங்குகள் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனய எனவே ஏலகிரி மலையில் குரங்குகளுக்கான தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரப்ப வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
Tags:    

Similar News