ராசிபுரத்தில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் காவடி எடுத்து ஊர்வலம்

ராசிபுரம் பாலமுருகன் கோவிலில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் காவடி எடுத்து ஊர்வலம் சென்றனர்.

Update: 2024-01-27 07:26 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஸ்ரீ எல்லை மாரியம்மன் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீபாலமுருகன் திருக்கோவிலானது அமைந்துள்ளது. இக்கோயிலில் சுற்று வட்டார பகுதியில் இருந்து காலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர். ராசிபுரம் கைலாசநாதர் கோவிலில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்தும் மேலும் ஆண் பக்தர்கள், பெண் பக்தர்கள் காவடி எடுத்தும் ஊர்வலமாக நடந்து சென்றனர்.

ஊர்வலமானது கைலாசநாதர் கோவிலில் இருந்து தொடங்கி பழைய பேருந்து நிலையம்,கடைவீதி, பட்டணம் சாலை,ஆத்தூர் சாலை உள்ளிட்ட வழியாகச் சென்று இறுதியாக ஸ்ரீபாலமுருகன் திருக்கோவிலை சென்றடைந்தது. இறுதியாக பெண்கள் கொண்டு வந்த பால் குடத்தை கொண்டு பாலமுருகனுக்கு சிறப்பு பால் அபிஷேகமும், பல்வேறு முக்கிய அபிஷேகங்கள் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து ஸ்ரீ பாலமுருகனுக்கு ராஜா அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரணை கட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் முருகனை தரிசனம் செய்து அருள் பெற்றுச் சென்றனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News