முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கைது

அரசாணை எண் 243 ரத்து செய்ய வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-07-04 07:22 GMT

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் 

 தமிழ்நாடு பள்ளிககல்வித்துறையில் துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எதிரான அரசாணை எண் 243 ரத்து செய்ய வேண்டும், உச்ச நீதிமன்ற உத்தரவு வரும் வரையில் ஒன்றிய அளவிலான கலந்தாய்வுக்கு மாறாக நடைபெற உள்ள மாநில அளவிலான பணி மாறுதல் கலந்தாய்வினை நிறுத்தி வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் இயக்கங்களின் கூட்டமைப்பு (டிடோஜாக்) சார்பில் நேற்று  போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பணி மாறுதல் கலந்தாய்வு நடைபெற இருந்த பெரம்பலூர் கடைவீதியில் உள்ள பாத்திமா அரசு மானிய பள்ளியின் முன்பு 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டனர். அதனைத் தொடர்ந்து பள்ளியை முற்றுகையிட முயன்ற 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை பெரம்பலூர் நகர போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
Tags:    

Similar News