போலீஸ் நிலையத்தில் 50-க்கும் மேற்பட்ட பைக் தீ வைத்து எரிப்பு

ஆரணி தாலுகா போலீஸ் ஸ்டஷனுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த நிறுத்தி 50க்கும் மேற்பட்ட பைக்குகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றனர்.

Update: 2023-12-11 10:12 GMT

ஆரணி தாலுகா போலீஸ் ஸ்டஷனுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த நிறுத்தி 50க்கும் மேற்பட்ட பைக்குகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றனர்.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக ராஜாங்கம், சப்-இன்ஸ்பெக்டராக ஷாபுதீன் உட்பட 20-க்கும் மேற்பட்ட போலீசார் பணி புரிகின்றனர்.இந்த போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடக்கும் வழிப்பறி, திருட்டு மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் பைக்குகளை, போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.மேலும், மணல் கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று நடந்த 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு பாதுகாப்பு பணிக்காக இங்குள்ள போலீசார் சென்றனர்.ஒரு சில போலீசார் இரவு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நள்ளிரவு மர்ம நபர்கள் 2 பேர், தாலுகா போலீஸ் நிலையம் உள்ளே புகுந்தனர்.பின்னர் பைக்குகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ள இடத்துக்கு சென்று 50-க்கும் மேற்பட்ட, பைக்குகள் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்துவிட்டு' தப்பித்து சென்றனர்.

சிறிது நேரத்தில் பைக்குகள் அனைத்தும் தீப்பற்றி எரிந்தது. திடீரென உள்ளே பைக்குகள் தீப்பற்றி எரிவதை கண்ட போலீசார் விரைந்து சென்று தண்ணீர் ஊற்றி அணைத்தனர். அதற்குள் பல பைக்குகள் எரிந்து நாசமானது.இதுகுறித்து போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News