50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதிமுகவின் இணைவு
மல்லசமுத்திரம் பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பல்வேறூ கட்சிகளில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்;
Update: 2024-01-04 11:29 GMT
அதிமுகவில் இணைவு
திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மல்லசமுத்திரம் பகுதி சார்ந்த ஐம்பதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி தங்களை முன்னாள் அமைச்சரும் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவுமான தங்கமணி அவர்கள் முன்னிலையில் அதிமுகவில் இணைத்து கொண்டனர், இந்த நிகழ்ச்சியில் திருச்செங்கோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன் சரஸ்வதி, மல்லசமுத்திரம் பேரூர் கழகச் செயலாளர் சுந்தர்ராஜன், மல்லசமுத்திரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜன்,மல்ல சமுத்திரம் இளைஞரணி ஒன்றிய செயலாளர் செல்வம்,குமார்,சையது முபாரக்,பிரவீன் உள்ளிட்ட அதிமுக கழக நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.