வட்டாட்சியர் அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்டோர் மனு

நீர்நிலை பகுதி என இடிக்கப்பட்டு மாம்பாக்கத்தில் வீட்டுமனை பட்டா வழங்கியும் அளவீடு செய்யாததால் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Update: 2024-01-31 09:53 GMT
மனு அளிக்க வந்த பொதுமக்கள் 
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட 12-வது வார்டு பகுதியில் உள்ள 124 வீடுகள் மதுராந்தகம் ஏரி நீர் பிடிப்பு பகுதி எனக் கூறி நோட்டிஸ் வழங்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த 124 வீடுகளும் அகற்றப்பட்டது. இதையடுத்து இப்பகுதி மக்களுக்கு மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட மாம்பாக்கம் பகுதியில் ஒரு நபருக்கு ஒரு சென்ட் விதம் 124 நபர்களுக்கு 124 வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.. ஆனால் பட்டா வழங்கியும் இதனால் வரை இந்தப் பகுதி மக்களுக்கு அளவீடு செய்து அவரும் மனையாகப் பிரித்து வழி அமைத்து தர பலமுறை அரசு அதிகாரியிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை சமீபத்தில் நடைபெற்ற மக்கள் முதல்வர் திட்டத்திலும் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவினை அளித்தனர்..இந்த கோரிக்கை மனுவை ஏற்ற வட்டாட்சியர் இரு தினங்களில் இந்த இடத்திற்கு தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்.
Tags:    

Similar News