அரூர் அருகே ஜாதி வேறுபாடு பார்த்த மாமியார் மருமகள் கைது

அரூர் அருகே விவசாய பணிக்கு சென்றவர்களுக்கு ஜாதி வேறுபாடு காரணமாக கொட்டாங்குச்சியில் டீயை தந்த மாமியார், மருமகள் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2024-02-11 10:30 GMT

கொட்டங்குச்சியில் கொடுக்கப்பட்ட டீ

தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மொரப்பூர் அடுத்த போளையம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி செல்வி இவர் கம்பைநல்லூர் காவல் நிலையத்தில் கடந்த ஒன்பதாம் தேதி புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் கடந்த எட்டாம் தேதி செல்வி மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீ பிரியா வீரம்மாள் மாரியம்மாள் ஆகியோர் அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி பகுதியை சேர்ந்த சிவன் மனைவி சின்னதா என்பவரின் நிலத்திற்கு விவசாய பணிக்காக சென்றிருந்தனர்.

Advertisement

அப்போது டீ வேண்டும் என்று கேட்டபோது அவரது மருமகள் தரணி டீ எடுத்து வந்தார் அதனுடன் ஒரு எவர்சில்வர் டம்ளர் மற்றும் கொட்டாங்குச்சிகளை கொண்டு வந்துள்ளார்.

எங்கள் அனைவருக்கும் கொட்டாங்குச்சியில் டீயை ஊற்றி கொடுத்துள்ளார். அப்போது பிளாஸ்டிக் கப் இல்லையா என கேட்டபோது இல்லை எனக் கூறியுள்ளார்.

மேலும் அங்கிருந்து அவரது மாமியார் சின்னத்தாய் சில்வர் டம்ளர் டீ கொடுத்தால் இதனால் கடும் மன உளைச்சல் ஏற்பட்டதாகவும், ஜாதி வேறுபாடு காரணமாக எங்களுக்கு கொட்டாங்குச்சியில் டீ கொடுத்துள்ளதாகவும் இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் புகார் மனுவில் தெரிவித்து இருந்தார்.

இது சம்பந்தமாக வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியுள்ளது செல்வி கொடுத்த புகாரின் அடிப்படையில் சின்னதாயிமற்றும் தரணி ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்து நேற்று கைது செய்தனர்.

தொடர்ந்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு தர்மபுரி கிளை சிறையில் அடைத்துள்ளனர் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News