மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து வாலிபர் உயிரிழப்பு

மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து வாலிபர் உயிரிழப்பு;

Update: 2024-06-24 05:58 GMT

காவல்துறை விசாரணை


police station

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வேள்வி மக்கலம் கிராமத்தை சேர்ந்தவர் முருகவேல் இவரது மகள் ஆனந்த் /வயது 22). அதே ஊரை சேர்ந்த கதிர்வேல் மகன் ஸ்டாலின் (18) சின்னதுரை மகன் சிலம்பரசன் (18), நண்பர்க ளான இவர்கள் 3 பேரும் கடந்த 21-த் தேதி ஒரே மோட்டார் சைக்கிளில் குன்னம் சென்று அங்கு ஆதார் அட்டையில் திருத்தம் செய்து பின்னர் 3 பேரும் மீண்டும் சொந்த ஊரான வேள்விமங்கலத்திற்கு சென்று கொண்டிருந்தனர். ஓலைப் பாடி அருகேசென்றபோது எதிர்பாராதவிதமாகமோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறி கீழே கவிழ்ந்தது. இந்த விபத்தில் 3 பேரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவர்கள் 3 பேரையும் மீட்டு அரியலூர் அரசு மருத்துவம் னையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். பின்னர் ஸ்டாலின் மேல் சிகிச் சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட் டார் அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்த னா, ஆனால் சிகிச்சை பலனின்றி ஸ்டாலின் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து குன்னம் சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்
Tags:    

Similar News