மின் கம்பங்கள் வேண்டி வாகன ஓட்டிகள் கோரிக்கை
காங்கேயம்-வெள்ளகோவில் சாலையில் மின்கம்பங்கள் வேண்டிவாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
காங்கேயம்-வெள்ளகோவில் சாலையில் மின்கம்பங்கள் வேண்டிவாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காங்கேயம்முத்தூர் பிரிவில் இருந்து வெள்ளகோவில் வரை சாலையில் மின் விளக்குகள் இல்லை எனவும்,இதனால் அப்பகுதியில் பயணம் செல்லும் பொதுமக்கள் மின்விளக்குகள் அமைத்து தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலை மிகவும் போக்குவரத்து அதிகமுள்ள சாலையாகவும், நடந்து செல்பவர்கள் முதல் கனரக வாகனங்கள் என நிமிடத்திற்கு 10 முதல் 50 வாகனங்கள் கடக்க கூடிய பிரதான சாலையாகவும் இருந்து வருகிறது. இந்த நிலையில் சாலையை மேம்படுத்தவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், வாகனங்கள் சிரமமின்றி செல்லவும், வாகன விபத்துகளை தடுக்கவும் இருவழி சாலையை தற்போது நெடுஞ்சாலை துறை அகலப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் தற்போது காங்கேயம் வெள்ளகோவில் சாலையில் முத்தூர் பிரிவில் இருந்து சாலையில் மின்கம்ப விளக்குகள் பொருத்த வேண்டும் எனவும், இதனால் நல்லிரவில் இச்சாலை பாதுகாப்பாக கடந்து செல்ல மிகவும் உதவியாக இருக்கும் எனவும், இரவு நேரங்களில் இவ்வழியாக நடந்து செல்பவர்கள் மிகவும் சிரமமபடுவதால் இச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் இப்பகுதியில் குறைந்தது 200 மீட்டருக்கு ஒரு மின்கம்ப விளக்குகளாவது அமைத்து தரவேண்டும் எனவும் இது சம்பந்தப்பட்ட துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.