பல்லாங்குழி சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு நீர் தேங்குவதால் சாலைகள் மண்ணரிப்பு ஏற்பட்டு பல்லாங்குழி சாலைகளாக மாறி உள்ளது

Update: 2024-05-09 14:29 GMT

பல்லாங்குழி சாலை

 நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் சென்னை கன்னியாகுமரி தொழிற்தட திட்டத்தில் சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது .

மேம்பால பணிகள் காரணமாக பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு, வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் பள்ளிபாளையம் சங்ககிரி, நாமக்கல், சேலம் உள்ளிட்ட முக்கிய ஊர்களை இணைக்கும் பள்ளிபாளையம் நால்ரோடு பகுதி அருகே தற்போது, சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திருச்செங்கோட்டிற்க்கு காவிரி ஆற்றில் இருந்து கொண்டு செல்ல பயன்படும் குடிநீர் குழாய் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் ,குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது . இதன் அடிப்படையில் கடந்த சில நாட்களாக குடிநீர் குழாய் உடைந்து, பிரதான சாலை முழுவதும் குடிநீர் தேங்கி நிற்கிறது .

மேலும் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியின் காரணமாக சாக்கடையில் இருந்து வெளியேறும் நீரும் ஒன்றாக கலந்து குளம் போல் காட்சியளிப்பதால், அவ்வழியே  செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர் .நீர் அதிக அளவு தேங்கியால் மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, பல்லாங்குழி சாலையில் சிக்கிக் கொள்கிறது. இரவு நேரத்தில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகும் சம்பவமும் நடைபெற்று வருவதால்,

போர்க்கால அடிப்படையில் குடிநீர் குழாயை சரி செய்து தர வேண்டும். மண்ணரிப்பு ஏற்பட்டு பல்லாங்குழி சாலைகளாக காட்சியளிக்கும் தார் சாலையை சரி செய்து தர வேண்டும் என பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது..

Tags:    

Similar News