சீரமைக்கப்படாத சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-11-21 04:31 GMT

சேதமடைந்த சாலை 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
காஞ்சிபுரம் அடுத்த, திருமால்பூர் ரயில் நிலையத்தை ஓட்டி விருதசீர நதி செல்கிறது. இந்த நதிக்கரை ஓரத்தில், பள்ளூர் ஊராட்சி நிர்வாகம் சிமென்ட் சாலை அமைத்து உள்ளது. கடந்த ஆண்டு, விருதசீர நதியின் வெள்ளப்பெருக்கல், மண் அரிப்பு ஏற்பட்டு சிமென்ட் சாலை பாதியாக உடைந்து சேதமடைந்தது. இந்த சாலை ஒரு ஆண்டாகியும் சீரமைக்கவில்லை என, வாகன ஓட்டிகள் புலம்பி வருகின்றனர். இதனால், திருமால்பூர் ரயில் நிலையம் மற்றும் பள்ளூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து, விருதசீர நதிக்கரை ஓர சிமென்ட் சாலையை கடந்து, பள்ளூர் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் வராஹி கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட ஊரக வளர்ச்சி துறையினர், சேதமடைந்த சாலைக்கு பதிலாக, புதிய சாலை போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது."
Tags:    

Similar News