பார்க்கிங் இல்லாத லாட்ஜ்கள் வாகன ஓட்டிகள் அவதி
காஞ்சிபுரம்- தனியார் லாட்ஜ்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி இல்லாமல் செயல்பட்டு வருவருவதால் வாகன ஓட்டிகள் அவதி. எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் கோரிக்கை எழுந்துள்ளது.
By : King 24x7 Angel
Update: 2024-01-24 11:37 GMT
காஞ்Lசிபுரம் காமாட்சியம்மன் கோவில், உலகளந்த பெருமாள், ஆதிகாமாட்சி காளிகாம்பாள் கோவில் சுற்றியுள்ள பகுதியில், 10க்கும் மேற்பட்ட தனியார் லாட்ஜ்கள் உள்ளன. இதில், பெரும்பாலான லாட்ஜ்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி இல்லாமல் செயல்பட்டு வருகிறது. இதனால், வெளியூரில் இருந்து இப்பகுதியில் உள்ள கோவில்களில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் லாட்ஜ்களில் தங்கும்போது, தங்களது, கார், வேன் உள்ளிட்ட வாகனத்தை சன்னிதி தெரு, மாட வீதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால், காமாட்சியம்மன் கோவில், உலகளந்தார் மாட வீதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும், இப்பகுதியில் உள்ள கடை மற்றும் வீட்டு வாசலில் வாகனங்கள் நிறுத்துவதால், வாடிக்கையாளர்கள் கடைக்கு வந்து செல்ல சிரமம் ஏற்படுகிறது. தங்களது வாகனங்களை வீட்டில் இருந்து வெளியே எடுத்து வரவும், உள்ளே செல்ல முடியாத சூழல் ஏற்படுவதாக அப்பகுதியினர் புலம்புகின்றனர். எனவே, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், தனியார் லாட்ஜ்களில் 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது."