எம்.பி அருண் நேரு பெரம்பலூர் வருகை - திமுகவினர் வரவேற்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த எம்.பி அருண் நேருவிற்கு திமுகவினர் வரவேற்பு அளித்தனர்.;
Update: 2024-06-15 06:42 GMT
எம்.பி அருண் நேருவிற்கு வரவேற்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு ஜூன் 14ஆம் தேதி இன்று பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள திமுக அலுவலகத்திற்கு வருகை புரிந்த பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என். அருண் நேருவை திமுக சார்பில் பெரம்பலூர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர்.சிவசங்கர் சால்வை அணிவித்து வரவேற்றார். இந்நிகழ்வில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்