பர்கூர் பகுதியில் நீர்தேக்க தொட்டியை திறந்து வைத்த எம்.பி
பர்கூர் பகுதியில் மக்கள் பயன்பாட்டிற்கு மேல் நிலை நீர்தேக்க தொட்டியை திறந்து வைத்தார் எம்.பி. செல்லக்குமார்.
By : King 24X7 News (B)
Update: 2024-02-05 13:18 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட துரைஸ் நகர் பகுதியில் 1.50லட்சம் கொள்ளளவு கொண்ட ரூ.25 லட்சம் மதிப்புள்ள மேல்நிலை நீர் தேக்கதோட்டியை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பொதுமக்களிடம் குறை நிறைகளை நேரில் கேட்டறிந்தார் இந்த நிகழ்வில் பேரூராட்சி தலைவர் சந்தோஷ்குமார், அலுவலக பணியாளர்கள் துரைஸ் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.