நார்த்தம்பட்டியில் பல்வேறு நலத்திட்ட பணிகள் துவங்கி வைத்த எம்பி

நார்த்தம்பட்டி ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சுமார் 47 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை, மின்சாரக்கம்பம், மின்விளக்குகள் மற்றும் ரேஷன் கடை ஆகியவற்றை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

Update: 2024-03-14 09:19 GMT

பணிகளை தொடக்கி வைத்த எம்பி

தர்மபுரி கிழக்கு மாவட்டம் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியம் நார்த்தம்பட்டி ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சுமார் 47 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை, மின்சாரக்கம்பம், மின்விளக்குகள் மற்றும் ரேஷன் கடை ஆகியவற்றை பூமி பூஜை செய்து தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ. சுப்ரமணி EX.MLA, தர்மபுரி பாராளுமன்ற உறுப்பினர் DNV.செந்தில்குமார் MP துவக்கி வைத்தனர்.

நார்த்தம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் கலைச்செல்வன் முன்னிலை வகித்தார்.இந்த நிகழ்வில் மாவட்ட கழக பொருளாளர் தங்கமணி,பொதுக்குழு உறுப்பினர் நட்ராஜ், நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்,ஏ.எஸ் சண்முகம் நல்லம்பள்ளி மத்திய ஒன்றிய கழக செயலாளர் கேபி மல்லமுத்து,மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர் பெரியண்ணன்,

நல்லம்பள்ளி முன்னாள் ஒன்றிய கழகச் செயலாளர் பி சி துரைசாமி,இளைஞர் அணி மேற்கு மாவட்ட துணைஅமைப்பாளர் மகேஷ் குமார் கிளை கழக நிர்வாகிகள், செல்லப்பன் , சின்னசாமி ,என் ஆர் மாது ,தண்டபாணி மற்றும் பொதுமக்கள் என பலர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News