டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் சிலையை ஆதீனம் திறந்தார்

மயிலாடுதுறை  அருகே விளநகரில் எம்.எஸ்.உதயமூர்த்தியின் நினைவாக அவரின் திருவுருவச்சிலை அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது.

Update: 2024-02-06 07:07 GMT

மயிலாடுதுறை  அருகே விளநகரில் எம்.எஸ்.உதயமூர்த்தியின் நினைவாக

அவரின் திருவுருவச்சிலை அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது

சிந்திக்கும் திட்டங்களை தயக்கமின்றி செயல்படுத்த வேண்டும் தருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் அருளாசிவழங்கினார் தமிழக எழுத்தாளரும், பல்லாயிரம் இளைஞர்களின் தன்னம்பிக்கையை வளர்த்தவரும் தொழிலதிபருமான, மக்கள் சக்தி இயக்கம்  என்ற அமைப்பை நிறுவியவர் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி.

அவர் பிறந்த சொந்த ஊரான மயிலாடுதுறை  அருகே விளநகரில் அவரது நினைவாக திருவுருவச்சிலை அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது.    

தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம்  விளநகரில் உதயமூர்த்தி சிலையை திறந்துவைத்து அருளாசி வழங்கி பேசுகையில், தன்னுடைய எழுத்தாற்றளாலும், சிந்தனை செயல்களால் மக்களை நல்வழி படுத்தியவர். இது ஒரு அரசன் செய்கின்ற வேலை அதனை உதயமூர்த்தி செய்திருக்கிறார் நல்ல நடத்தைகளை சொல்லிகொடுப்பது அரசின் கடமை அந்த நன்னடத்தையை உலகிற்கு சாதித்து காட்டியவர் உதயமூர்த்தி. 

தன்னிறைவு பசுமை கிராமங்கள் இயக்கம் தேசிய அமைப்பாளர் ஆறுபாதி கல்யாணம், விஸ்வநாதன், யசோதா, சத்தியநாராயணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.  சித்தார்த்தன் நன்றி கூறினார்

Tags:    

Similar News