முகூர்த்த தினம்: சேலம் கோட்டத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

முகூர்த்த தினத்தை முன்னிட்டு 200 சிறப்பு பஸ்கள் நாளை முதல் இயக்கபடுகிறது.;

Update: 2024-02-15 08:41 GMT

சிறப்பு பேருந்துகள்

முகூர்த்த தினத்தை முன்னிட்டு சேலம் கோட்டத்தில் இருந்து 200 சிறப்பு பஸ்கள் நாளை முதல் இயக்கப்படுகின்றன. அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்ட நிர்வாக இயக்குனர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது,  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்டத்துக்குட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 1,900 பஸ்கள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன.

வார இறுதி நாட்கள் மற்றும் வளர்பிறை முகூர்த்த தினத்தையொட்டி சேலம் கோட்டம் சார்பில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 19-ந் தேதி வரை பல்வேறு வழித்தடங்களில் 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

Advertisement

அதாவது, சேலம், பெங்களூரு, சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. பெங்களூருவில் இருந்து சேலம், திருவண்ணாமலைக்கும், திருவண்ணாமலையில் இருந்து பெங்களூருவுக்கும்,

ஓசூரில் இருந்து சேலம், புதுச்சேரி, கடலூருக்கும், சேலத்தில் இருந்து சிதம்பரம், காஞ்சீபுரத்திற்கும், ஈரோட்டில் இருந்து பெங்களூருவுக்கு செல்லும் அரசு பஸ்களில் பயணம் செய்வதற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் பல்வேறு வழிதடங்களில் செல்லும் அரசு பஸ்களில் முன்பதிவு செய்யப்படுகிறது.

எனவே, பயணிகள் அனைவரும் கூட்ட நெரிசலை தவிர்த்து பாதுகாப்பான பயணம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News