முக்கூரில் மஹா ஸம்ப்ரோக்ஷணம் விழா
செய்யாறு அருகே முக்கூரில் ஸ்ரீ கனகவல்லி, ஸ்ரீ ராஜ்யலட்சுமி, ஸ்ரீ மகாலட்சுமி தாயார் கோயில் மஹா ஸம்ப்ரோக்ஷணம் , திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2023-10-26 09:22 GMT
ஸம்ப்ரோக்ஷணம் விழா
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே முக்கூரில் ஸ்ரீ கனகவல்லி, ஸ்ரீ ராஜ்யலட்சுமி, ஸ்ரீ மகாலட்சுமி தாயார் கோயில் மஹா ஸம்ப்ரோக்ஷணம் விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை ப்ரதிஷ்டா சங்கல்பம், யாத்திரா ப்ரவேஷம், மறுநாள் திங்கள் கிழமை த்வஆர பூஜா,ரக் ஷா பந்தனம், செவ்வாய்க்கிழமை வாஸ்து ஹோமம், புதன்கிழமை சதுஸ்தார்சனம், வியாழக்கிழமை காலை 8 மணி முதல் ஹோமம் பூர்ணாஷூதி முடிந்து கும்ப கலசங்கள் புறப்பட்டு தாயார் சந்நிதி மற்றும் விமான கும்ப கலசங்களுக்கு பட்டாச்சார்யர்கள் வேத மந்திரம் ஓதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்வில் வைணவர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.