காமாட்சி அம்மன் கோவிலில் முளைப்பாரி ஊர்வலம்
சங்கரன்கோவில் புதுமனை காமாட்சி அம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடந்த முளைப்பாரி ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Update: 2024-02-06 01:26 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் புதுமனை நான்காம் தெருவில் காமாட்சி அம்மன் இருக்கன்குடி 21 ஆம் ஆண்டு பாதயாத்திரை குழு சார்பில் காமாட்சி அம்மன் திருக்கோவில் கொடை விழாவானது நடைபெற்று வருகிறது கொடை விழாவை முன்னிட்டு இன்று முளைப்பாரி எடுத்து ஊர்வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் திரளான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து காமாட்சி அம்மனுக்கு முளைப்பாரி எடுத்து ஊர்வலத்தில் கலந்து கொண்டனர் மேலும் நாளை மறுதினம் இருக்கன்குடி நோக்கி பாதயாத்திரை செல்ல இருக்கும் நிலையில் காமாட்சி அம்மனுக்கு முளைப்பாரி எடுத்து சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் தீபாராதனைகள் நடைபெற்று காமாட்சி அம்மனின் அருள் பெற்றனர். பின்னர் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.