நகராட்சி துப்புரவு பணியாளர் தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம், சாஸ்தான்கரை பகுதியில் மனைவி மது அருந்த பணம் தராததால் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.

Update: 2024-05-22 02:52 GMT
தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே சாஸ்தான்கரை பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (53). குளச்சல் நகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சரோஜா. அசோக் குமார் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்வது வழக்கமாம். இந்த நிலையில் சம்பவ தினம் சரோஜா மருந்து வாங்க மருத்துவமனைக்கு புறப்பட்டு உள்ளார். அப்போது அசோக்குமார் மது அருந்து பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.

ஆனால் பணம் தர மறுத்த சரோஜா கணவரை கண்டித்து விட்டு மருத்துவமனையில் சென்று விட்டார். இதற்கு இடையே சரோஜா வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, அசோக்குமார் விஷம் குடித்து மயங்கிய நிலையில் காணப்பட்டார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து அவரை பரிசோதித்த போது அசோக் குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக சரோஜா குளச்சல் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News