கழிவு நீர் வாகனங்களை ஆய்வு செய்த நகராட்சி ஆணையர்

விருதுநகரில் கழிவுநீர் வாகனங்கள் முறைப்படி உரிமம் பெற்று இயங்குகிறதா என்றும், இயந்திரங்கள் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா என்றும் நகராட்சி கமிஷனர் லீனா சைமன் ஆய்வு செய்தார்.

Update: 2024-03-04 05:30 GMT
 நகராட்சி அலுவலகம் 

கழிவுநீர் வாகனங்கள் முறைப்படி உரிமம் பெற்று இயங்க வேண்டும் என நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன் படி மாதம் ஒரு முறை நகராட்சி ஆணையர் தலைமையில் ஆய்வு நடத்தப்படுகிறது. நேற்று நடந்த ஆய்வில் மதுரை ரோட்டில் நின்று கொண்டிருந்த கழிவுநீர் வாகனங்களின் உரிமையாளர்கள் வரவழைக்கப்பட்டு உரிமம் பரிசோதிக்கப்பட்டது. அவற்றை முன்புற கண்ணாடியில் ஒட்ட கமிஷனர் லீனா சைமன் அறிவுறுத்தினார்.

மேலும் பெறப்படும் கழிவுநீரை நீர்நிலைகளை கொட்டாமல், ஒதுக்கப்பட்டுள்ள ஆற்றுப்பால பம்பிங் ஸ்டேஷனில் கொட்ட அறிவுறுத்தினார். பொறியாளர் எட்வின் பிரைட் ஜோஸ், சுகாதார அலுவலர் இளங்கோ, ஆய்வாளர் செந்திலாண்டவர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News