மல்லசமுத்திரத்தில் பேரூராட்சி மன்றக் கூட்டம்
மல்லசமுத்திரத்தில் நடந்த பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.;
By : King 24x7 Website
Update: 2024-02-29 12:54 GMT
மல்லசமுத்திரத்தில் நடந்த பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்தில் நேற்றுமுன்தினம் நடந்த சாதாரணகூட்டத்திற்கு தலைவர் திருமலை தலைமை வகித்தார். ஈ.ஓ.,ராஜசேகரன் முன்னிலை வகித்தார். இதில், மல்லசமுத்திரம் பஸ்ஸ்டாண்டிற்குள் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவர் இடையே பொதுப்பாதை விடுவது சம்மந்தமாக தீர்மானம் வாசிக்கப்பட்டது. அதற்கு கவுன்சிலர்கள் சசிகலா, தங்கமணி, முருகேசன், மோகனா, லட்சுமி, ஞானசெளந்தரி ஆகியோர் ஆட்சேபனை தெரிவித்து, தலைவரிடம் மனுஅளித்தனர். மேலும் சாலைவசதி, குடிநீர்வசதி, பைப்லைவசதி உள்ளிட்ட 24தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இதில், 15 வார்டு உறுப்பினர்களில் 1வார்டு உறுப்பினர் மட்டும் கலந்துகொள்ளவில்லை.