அரசியல் கட்சி விளம்பரங்களை அழித்த நகராட்சி ஊழியர்கள்
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் குழித்துறை பகுதியில் அரசியல் கட்சி விளம்பரங்களை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.;
அரசியல் கட்சி விளம்பரங்கள் அளித்த நகராட்சி ஊழியர்கள்
பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படுவதற்கான தேதி நேற்று அறிவிக் கப்பட்டது. ஏப்ரல் 19ம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக 39 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை பொருத்தவரை, நாகர்கோவில், கன்னியாகுமரி, குளச்சல்,பத்மநாபபுரம்,கிள்ளியூர் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய கன்னியாகுமரி பாராளு மன்ற தொகுதிக்கான தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் அரசியல் கட்சி தலைவர்கள் சிலையில் சின்னங்கள் இருந்தால் அவை துணி கொண்டு மூடுவதற்கான நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. விளவங்கோடு சட்ட மன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால் குழித்துறை மார்த்தாண்டம் உட்பட பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள அரசியல் கட்சி போஸ்டர்கள் விளம்பரங்களை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.