கடையநல்லூரில் மகளிா் கல்லூரி அமைக்க முஸ்லீம் லீக் கோரிக்கை

கடையநல்லூரில் மகளிா் கல்லூரி அமைக்க முஸ்லீம் லீக் கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர்;

Update: 2024-01-04 13:00 GMT

மாவட்ட ஆட்சியரை சந்தித்த நிர்வாகிகள்

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் அரசு மகளிா் கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக அக் கட்சியின் தென்காசி மாவட்ட தலைவா் எம்.அப்துல் அஜீஸ், மாவட்ட செயலா் செய்யது பட்டாணி மற்றும் நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் துரை.ரவிச்சந்திரனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கடையநல்லூரில் அரசு மகளிா் கலைக் கல்லூரி அமைக்க வேண்டும். புளியங்குடி அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சை பிரிவு 24 மணி நேரமும் இயங்கக் கூடிய வகையில் தரம் உயா்த்த வேண்டும்.

Advertisement

கடையநல்லூா் வட்டம் அமைக்கப்பட்டு பல வருடங்கள் ஆகியும் அரசு கருவூலம் இல்லை. இதனால் அரசு ஊழியா்களுக்கும், ஓய்வு பெற்ற அரசு ஊழியா்களுக்கும் சிரமமாக உள்ளது. எனவே கடையநல்லூரில் அரசு கருவூலம் அமைக்க வேண்டும். புளியங்குடி சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராமங்களை ஒருங்கிணைத்தால் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ளது.

எனவே மக்கள் பயன்படும் விதமாக புளியங்குடியை தனி வட்டமாக அறிவிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

Tags:    

Similar News