முத்தமிட்டவாரே விஜயின் ஓவியத்தை வரைந்த ஓவிய ஆசிரியர்

திருக்கோவிலூர் அருகே முத்தமிட்டவாரே விஜய் படத்தை ஐந்து நிமிடங்களில் வரைந்த ஓவியர் செல்வம்.

Update: 2024-02-20 07:22 GMT

விஜயின் ஓவியத்தை வரைந்த ஓவிய ஆசிரியர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை சேர்ந்த ஓவியர் சு.செல்வம் நடிகர் விஜய் வருடத்தில் ஒரு படமாவது நடிக்க வேண்டி, விஜய்யின் "ரஞ்சிதமே ஸ்டைலில் முத்தம் கொடுத்தவாறே" நடிகர் விஜய் உருவத்தை வரைந்தார். நடிகர் விஜய் கடந்த சில வருடங்களாகவே அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார், அரசியலுக்கு வருவாரா, வரமாட்டாரா.. எனப் பலரும் எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில் தனது கட்சியின் பெயரை தமிழக வெற்றிக் கழகம் என அறிவித்திருக்கிறார் விஜய், அதோடு, இப்போது நடித்து வரும் படத்தை முடித்த பின் முழுமையான அரசியல் பணி என குறிப்பிட்டுள்ளார். கோட் படத்திற்குப் பின்னால் விஜய் நடிப்பாரா என்பது தெரியவில்லை. வருடா வருடம் விஜய் படத்திற்காகவே காத்திருக்கும் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாகவே அமைந்துள்ளது, நடிகர் விஜய் அவர்களுக்கு அன்பான வேண்டுகோள் வைக்கும் விதமாக ஓவியம், வருடத்திற்கு ஒரு படமாவது நடிகர் விஜய் நடிக்க வேண்டி ஓவியர் செல்வம் ஒரு உள்ளங்கையில் கீழே ஊற்றாதபடி வண்ணம் வைத்து, மற்றொரு கையால் வண்ணத்தை தொட்டு விஜயின் "ரஞ்சிதமே ஸ்டைலில் முத்தங்கள் கொடுத்து முத்தம் கொடுத்தவாறே முத்தங்களை பறக்கவிட்ட கை விரல்களால் " நடிகர் விஜய் படத்தை ஐந்து நிமிடங்களில் ஓவியர் செல்வம் வரைந்தார்.
Tags:    

Similar News