முத்துகாபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கோ-கோ போட்டியில் சாதனை
சேந்தமங்கலம் அடுத்த முத்துகாபட்டியில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.
நாமக்கல் மாவட்ட அளவிலான இளையோர் மாணவிகள் கோ கோ விளையாட்டு போட்டி தேவனாங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இப்போட்டியில் குரு வட்ட அளவில் 8 அணிகள் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றனர். போட்டியில் முத்துகாபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்து, புதுக்கோட்டையில் நடக்கும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி அடிப்படையில் தேர்வாகியுள்ளனர்.
எருமபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியல் நடந்த இளையோர் போட்டியில் முத்துகாபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 2வது இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர். மாவட்ட அளவிலான தடகள போட்டியில் 3000 மீட்டர் ஓட்டபந்தையம் போட்டியில் பூவரசன் வெற்றி பெற்று வெள்ளி பதக்கம் வென்றார். மும்முறை தாண்டல் போட்டியில் ராமன் வெற்றி பெற்று போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார். 3000 மீட்டர் ஓட்டபந்தையம் போட்டியில் மனீஷா வெற்றி பெற்று வெள்ளி பதக்கம் வென்றார்.
தொடர் ஓட்டபந்தையம் போட்டியில் கீதா, பிரனிஷ்கா, மௌனிகா, தமிழ்செல்வி ஆகியோர் வெள்ளி பதக்கம் வென்றனர். மூத்தோர் தடைத்தாண்டு ஓட்டபந்தையம் போட்டியில் காந்திசெல்வன் வெற்றி பெற்று வெண்கலம் பதக்கம் வென்றார். செங்கல்பட்டில் நடக்கும் மாநில அளவிலான போட்டிக்கு காந்திசெல்வன் தேர்வாகியுள்ளார்.
விழாவில் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மணவிகள், உடற்கல்வி ஆசிரியர் விமல்ராஜ் ஆகியோருக்கு பி.டி.ஏ., தலைவர் காளியப்பன், துணைத்தலைவர் ராஜா, பொருளாளர் செல்வராஜ், பஞ்., தலைவர் அருள்ராஜேஸ், துணைத்தலைவர் வருதராஜன், பெரியண்ணன் அறக்கட்டளை மணி ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினார். விழாவில் தமிழாசிரியர் தங்கவேல், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பள்ளி இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.