நெல்லை அருகே மாற்றுத்திறனாளி ஒர்க்ஷாப்பில் மர்ம நபர்கள் கைவரிசை

நெல்லை அருகே மாற்றுத்திறனாளி ஒர்க்ஷாப்பில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

Update: 2024-06-28 10:50 GMT

காவல் நிலையம்

திருநெல்வேலி மாவட்டம் கட்டுடையார் குடியிருப்பை சேர்ந்தவர் சுரேஷ்(40). மாற்றுத்திறனாளியான இவர் வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் சாலையில் ஒர்க்க்ஷாப் நடத்தி வருகிறார். இவர் கடையை இன்று திறந்தபோது அங்கு இருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கம், டயர்கள், இரும்பு டிரம் போன்ற பொருட்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது.

இது குறித்து சுரேஷ் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News