பள்ளிக்கு செல்ல விருப்பமில்லாததால் மாயமான மாணவன்!
பள்ளிக்கு செல்ல விருப்பமில்லாததால் மாயமான பள்ளி மாணவன் வீட்டின் பரணியில் இருந்து கண்டுபிடிப்பு. இச்சம்வம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;
By : King 24x7 Angel
Update: 2024-01-31 07:27 GMT
பள்ளிக்கு செல்ல விருப்பமில்லாததால் மாயமான மாணவன்!
பள்ளிக்கு செல்ல விருப்பமில்லாததால் மாயமான மாணவன்!
அன்னவாசல் அருகே மாதிரி பட்டியை சேர்ந்த நான்காம் வகுப்பு படிக்கும் சிறுவன் திடீரென வீட்டில் இருந்தவன் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவனை பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை இது குறித்து அன்னவாசல் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அன்னவாசல் தீயணைப்புத் துறையினர் மாதிரி பட்டியில் உள்ள குளம், கிணறுகளில் தேடி உள்ளனர். மேலும் சிறுவனை கடத்திச் சென்றிருக்கலாம் என ஆடியோ வலைதளத்தில் பரவி வந்தது. மேலும் அன்னவாசல் போலீசார் தீவிர தேடும்பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் திடீரென வீட்டின் பரணியில் இருந்து இருமல் சத்தம் கேட்டுள்ளது அதன் பிறகு பரணியில் தேடி பார்த்த பொழுது பாத்திரங்களுக்கிடையே சிறுவன் ஒளிந்து இருந்தது தெரிய வந்தது. பின்னர் சிறுவனிடம் விசாரித்ததில் பள்ளியில் கொடுத்த வீட்டு பாடத்தை செய்யாததால் பயந்து பள்ளிக்கு செல்லாமல் அவன் ஒளிந்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.