சுங்கச்சாவடியை அகற்றக்கோரி நாம் தமிழர் கட்சியினர் மனு

சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என கோரிக்கை.

Update: 2024-03-04 11:43 GMT
நாம் தமிழர் கட்சியினர் மனு

திருப்பூர் மாவட்டம் வேலம்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை அகற்றக் கோரி நாம் தமிழர் கட்சியினர் நாடாளுமன்ற வேட்பாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றியம் , திருப்பூர் தாராபுரம் சாலை வேலம்பட்டியில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.  இந்த இடமானது குளத்தை ஆக்கிரமித்து கடந்த 2018 ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ள நீர்நிலை புறம்போக்கு என தெற்கு வட்டாட்சியரும் ,  2022 ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியரும் சுங்கச்சாவடி அலுவலகத்தை அப்புறப்படுத்த வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும் கிராம சபை கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் சுங்கச்சாவடி அலுவலகத்தை அப்புறப்படுத்தப்படாமல், மீண்டும் சுங்கச்சாவடியை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து சுங்க கட்டணம் வசூலிக்கும் பணி நடந்து வருவதாகவும், தேசிய நெடுஞ்சாலைக்கு உண்டான திட்டத்தின் படி எந்தவித வசதியும் இல்லாத வேலம்பட்டி சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கையை கைவிட்டு உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியினர் மனு அளித்தனர்.

திருப்பூர், கோவை,  நீலகிரி, பொள்ளாச்சி, ஈரோடு தொகுதிகளைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளர்களுடன் நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கோரிக்கை மனு அளித்தனர்.

Tags:    

Similar News