நாகை மாவட்ட அதிமுக செயலாளர் ஓ.எஸ்.மணியனை பதவி நீக்க வேண்டும் - அதிமுக பிரமுகர் பி.வி.கே பிரபு பேட்டி
நாகை மாவட்ட அதிமுக செயலாளர் ஓ.எஸ்.மணியனை பதவி நீக்க வேண்டும் என அதிமுக பிரமுகர் பி.வி.கே பிரபு பேட்டியளித்துள்ளார்.
Update: 2024-02-22 04:38 GMT
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் பி.வி.கே.பிரபு ஓபிஎஸ் அணியில் அமைப்புச் செயலாளராக இருந்து வந்தார். நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையை ஏற்றுக்கொண்டு அதிமுகவில் உள்ளார். அதிமுகவில் இருந்து வரும் பி.வி.கே பிரபு செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது. நாகை மாவட்ட அதிமுக செயலாளராக இருக்கும் முன்னாள் அமைச்சரும் வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ்.மணியன் கட்சி தொண்டர்களுக்கு விரோதமாக செயல்படுவதால் அவரை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும். தொடர்ந்து மாவட்ட செயலாளர் கட்சியின் தொண்டர்களின் விருப்பத்திற்கு மாறாக புதிய பொறுப்பாளர்களகா அவருக்கு துதிபாடுவர்களை, ஜால்ராக்களை நியமித்து உள்ளார். புதிய கட்சி பொறுப்பாளர்களின் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும். தொடர்ந்து கட்சி தொண்டர்களின் விரோதப் போக்கை கடைபிடித்தால் வரும் பாராளுமன்ற தேர்தலில் நிச்சயமாக அதிமுக தோற்கும், தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது அதிமுக கட்சி. எனவே அதிமுக மாவட்ட செயலாளர் ஒ.எஸ். மணியனை மாற்றினால் தான் வரும் பாராளுமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் அதிமுக வெற்றி பெறும் என்பது உறுதி என பி.வி.கே.பிரபு பேட்டி அளித்தார்.