நாகை மாவட்டம் திமுக செயலாளர் கெளதமனிடம் வாழ்த்து பெற்ற மாணவி
12 ஆம் வகுப்பு பொது தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவி நாகை மாவட்டக் திமுக செயலாளரிடம் வாழ்த்துப் பெற்றார்.;
Update: 2024-05-08 09:20 GMT
12 ஆம் வகுப்பு பொது தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவி நாகை மாவட்டக் திமுக செயலாளரிடம் வாழ்த்துப் பெற்றார்.
நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் வாணவன்மகாதேவி கிராமத்தை சேர்ந்த மாணவி. என்.சுபிக்ஷா இவர் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் 600க்கு 568 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். இதையடுத்து நாகை மாவட்ட திமுக அலுவலகத்திற்கு வந்து நாகை மாவட்டக் கழகச் செயலாளரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் என்.கெளதமனிடம் வாழ்துப் பெற்றார்.என்.சுபிஷாவிற்கு என்.கெளதமன் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். உடன் தலைஞாயிறு ஒன்றிய கழக செயலாளர் மகாகுமார், வேதாரண்யம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் உதயம்.வே.முருகேசன், பெஉபொதுக்குழு முன்னாள் உறுப்பினர் வீரசேகரன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் சக்தி சம்பத், ஒன்றிய சார்பு அணி அமைப்பாளர்கள் இளைஞர் அணி சிவாஸ்கர், மாணவர் அணி மணிகண்டன் கிளை செயலாளர் மாரிமுத்து உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உள்ளனர்,