நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைப்பு

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் செல்ழும் பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.;

Update: 2024-05-17 09:01 GMT

சிவகங்கை கப்பல் 

நாகப்பட்டினம் துறைமு கத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கடந் தாண்டு அக்டோபர் 14ம் தேதி பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட் டது. 'செரியபாணி' என்று பெயர் கொண்ட இந்த கப்பல் இலங்கைக்கு சென்று வந்த நிலையில், இயற்கை சீற்றம் காரணமாக அக் டோபர் 20ம்தேதி முதல் நிறுத்தப்பட்டது. இதன் பின்னர் மீண்டும் கப்பல் சேவையை தொடங்கவலி யுறுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து 'சிவகங்கை' என்ற பெயர் கொண்ட கப்பல் அந்தமானில் இருந்து வரவழைக்கப்பட்டு நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கடந்த 13ம் தேதி முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

Advertisement

இந்த கப்பலில் பயணம் செய்ய விரும்புவோர் ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்ய அனைத்து ஏற்பா டுகளும் செய்யப்பட்டது. இதனால் பயணிகள் ஆர்வ முடன் இலங்கை செல்ல முன்பதிவு செய்திருந்த நிலையில் திடீரென கப்பல் சேவை வரும் 17ம் தேதிக்கு (இன்று) மாற்றப்படுவதாக கடந்த 12ம் தேதி அறிவிக் கப்பட்டது. அப்போதும் இலங்கை செல்ல 150க்கும் மேற்பட்ட பயணிகள். முன்பதிவு செய்து காத்தி ருந்தனர். இந்நிலையில் நேற்று திடீரென கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைக் கப்பட்டு, வரும் 19ம் தேதியில் இருந்து இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தமானில் இருந்து கொண்டுவரப்பட்ட 'சிவகங்கை' என்ற பெயர் கொண்ட கப்பல் சென்னை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சில சட்டரீதியான அனுமதி கிடைக்காத காரதுள்ளது. நாகை- இலங்கை கப்பல் சேவை தேதி தொடர்ந்து தள்ளி போவ தால் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளிடம் வருத் தம் தெரிவித்து அந்த தனி யார் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், 'இந்திய எல் லைக்குள் இயங்க அனு மதி மட்டுமே பெற்றிருந்த 'சிவகங்கை' என்ற பெயர் கொண்ட கப்பல் இலங்கை வரை இயக்கப்படவுள்ளதால், வணிக கடல் துறையின் சர்வதேச பதிவு எண் கிடைக்காத காரணத்தால் தொடர்ந்து கப்பல் சேவை • அறிவிப்பு மாற்றப்படுவதாகவும், குறிப்பாக தமிழ்நாடு கடல்சார்வாரிய துணைத்த லைவர், தலைமை செயல் அலுவலர் ஆகியோர் கொண்ட குழுவினர் நாகப்பட்டினம் துறைமுகத்தில் ஆய்வு செய்த பின்னரே அங்கிருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கப்பல் சேவை தொடங்கப்படும்' என தெரிவித்துள்ளது. இந்த கப்பல் சேவையை ஒன்றிய அரசு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News