நாகை - இலங்கை பயணிகள் கப்பல் மீண்டும் ஒத்தி வைப்பு - பயணிகள் ஏமாற்றம்
நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் பயணிகள், வணிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.;
Update: 2024-05-19 02:12 GMT
பயணிகள் கப்பல்
நாகப்பட்டினத்திற்கும் - காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை மீண்டும் காலவரையின்றி தாமதமாகியுள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா(Nimal Siripala de Silva) தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திற்கும், யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கும் இடையே மே 13 அன்று மீண்டும் ஆரம்பிக்கப்படிவிருந்த பயணிகள் கப்பல் சேவை "தொழில்நுட்பக் குறைபாடு" காரணமாக தாமதமாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். எனினும் "தொழில்நுட்பக் குறைபாட்டின்" தன்மை அமைச்சரால் வெளிப்படுத்தப்படவில்லை.