தூண்டில் வளைவு துறைமுகப் பணியை விரைந்து முடிக்க மீனவர்கள் கோரிக்கை
5 ஆண்டுகளாக முடியாமல் இருக்கும் தூண்டில் வளைவு துறைமுகம்.
நாகை மாவட்டம் வேதாரணியத்தை அடுத்த வெள்ளைபள்ளம் தூண்டில் வளைவு துறைமுகப் பணியை விரைந்து முடிக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெள்ளப்பள்ளம் மீனவர் கிராமத்தில் தமிழக அரசால் கடந்த 2017 ஆம் ஆண்டு தூண்டில் வளைவு துறைமுகம் அமைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. இந்நிலையில் திடீரென்று 70% பணி நிறைவடைந்த நிலையில் துறைமுக பணி நிறுத்தப்பட்டது. சுமார் ஐந்து ஆண்டு காலம் பணி நிறைவடையாததால் மீனவர்கள் வேதனை அடைந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று நாகை மாவட்ட பகுதிக்கு ஆய்வுக்கு வந்த சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர் சாக்கோட்டை அன்பழகன் இடம் வெள்ளை பள்ளம் மீனவ கிராம பஞ்சாயத்தார்களும் பொதுமக்களும் சாலையில் நின்று மனு கொடுத்தனர். அதைப் பெற்றுக் கொண்ட குழு தலைவர் உடனடியாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று பணி முடிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அவருடன் மாநில மீனவர் அணி துணைச் செயலாளர் மனோகரன், சட்டமன்ற உறுப்பினர் ஓ எஸ் மணியன், நாகை மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் உடன் இருந்தனர்,