நாகப்பட்டினம் : மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது
வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 255 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
அதனை தொடர்ந்து தாட்கோ துறை சார்பில் தூய்மை பணியாளர்களின் நல வாரியத்தின் மூலம் தூய்மை பணியாளர் திருமதி.செல்வி அவர்கள் இயற்கை மரணம் அடைந்ததையடுத்து அவர்களுடைய குடும்பத்திற்க்கு ஈமசடங்கு உதவித்தொகை ரூ.25இ000ஃ-க்கான காசோலையினையும், மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒரு மாற்றுத்திறனாளிக்கு சக்கர நாற்காலியினையும், செவித்திறன் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு நவீன காதொலி கருவியினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பேபி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கார்த்திகேயன் மற்றும் அரசு அலுவலர்கள்; பலர் கலந்து கொண்டனர்.