நாகர்கோவிலில் கறிக்கோழி விலை கிலோ ரூ.175 ஆக உயர்வு

உற்பத்தி குறைவு, தேவை அதிகரிப்பு காரணமாக கறிக்கோழி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

Update: 2024-05-26 05:57 GMT

கறிக்கோழி (பைல் படம்) 

தமிழகத்தில் வட மாவட்டங்களில் பலவற்றிலும் பலத்த வெயில் காரணமாக கறிக்கோழி உற்பத்தி குறைந்தது. அதே வேளையில் விடுமுறை காலம் என்பதால் கறித்கோழி தேவை அதிகரித்தது. உற்பத்தி குறைவு, தேவை அதிகரிப்பு காரணமாக கறிக்கோழி விலை கிடுகிடு என உயரத்தொடங்கியுள்ளது. இதனால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.        இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம்  நாகர்கோவிலில் ஒரு கிலோ கறிக்கோழி இன்று ரூ.175க்கு விற்பனை செய்யப்படுகிறது.    

கடந்த சில மாதங்கள் முன்பு ரூ.165 வரை உயர்ந்திருந்த கறிக்கோழி விலை பின்னர் படிப்படியாக குறைய தொடங்கியது. இந்தநிலையில் மீண்டும் திடீரென்று விலை உயர்ந்துள்ளது. கறிக்கோழிக்கு தட்டுப்பாடு காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் கறிக்கோழி வாங்குவதையும் தவிர்த்து வருகின்றனர்.        மேலும் ஓட்டல்களில் சிக்கன் சார்ந்து தயாரிக்கப்படும் உணவு பதார்த்தங்களின் விலையையும் கடைகாரர்கள் உயர்த்தியுள்ளனர். அசைவ உணவுகள் விலை உயர்வால் ஓட்டல்களில் விற்பனையும் மந்த கதியில் உள்ளது.

Tags:    

Similar News