நாகூர் : திருட்டு வழக்கில் வாலிபர் கைது - 32 பவுன் நகை பறிமுதல்
நாகூரில் நடந்த திருட்டு சம்பவத்தில் தேடப்பட்டு வந்த வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 32 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . ஹர்ஷ்சிங் உத்தரவின்பேரில் நாகப்பட்டினம் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் .பாலகிருஷ்ணன் வழிகாட்டுதலில் திருட்டு நாகூர் காவல் நிலைய வழக்கில் உதவி ஆய்வாளர் இரணியன் தலைமையிலான சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பாலசுப்ரமணியன், கந்தசாமி, காவலர்கள் மாதவன், அசோக்,அப்புராஜ் ஆகியோர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி தனிப்படையினர் மேற்கொண்ட விசாரணையில் பாபநாசம் கல்விக் குடி சோட்டான் மகனஜெகபர் சாதிக் என்பவர் மேற்படி குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டது கண்டறியப்பட்டு அவரிடம் இருந்து 32 பவுன் தங்க நகைகள் மற்றும் ஆட்டோவும் கைப்பற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து நாகூர் காவல் ஆய்வாளர் சதீஸ்குமார் விசாரணை மேற்கொண்டு வருகிறார். சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அவர்கள் மற்றும் நாகப்பட்டினம் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்கள்.