நாமக்கல்லில் ஓவியப் போட்டி : பள்ளி மாணவ மாணவிகளுக்கு அழைப்பு!
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5-ம் தேதி பள்ளி மாணவர்களுக்கு பல்வேறுப் போட்டிகளை நடத்தி பசுமை தமிழக மக்கள் இயக்கம் பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி வருகிறது.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஓவியப் போட்டியில் பங்கேற்க பள்ளி மாணவ மாணவிகளுக்கு பசுமை தமிழக மக்கள் இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து அந்த இயக்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது... ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறுப் போட்டிகளை நடத்தி பசுமை தமிழக மக்கள் இயக்கம் பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி வருகிறது.
இதைத் தொடர்ந்து, வருகிற ஜூன் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அன்று காலை 9 மணிக்கு நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள டிரினிட்டி இண்டர்நேஷனல் (CBSE) பள்ளி வளாகத்தில் "மரம் நடுவோம் புவியை காப்போம்" என்ற தலைப்பில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர், மாணவிகளுக்கான ஓவியப் போட்டி நடைபெறுகிறது.ஓவியம் வரைய தேவையான உபகரணங்களை மாணவர்களே கொண்டுவர வேண்டும்.
போட்டி முடிவுகள் அப்போதே அறிவிக்கப்பட்டு, வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். பங்குபெற்ற அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்படும். இதுகுறித்து கூடுதல் தகவல் பெற விரும்புவோர் ஓவிய ஆசிரியர்கள் C.மகாமணி Cell: 96884 66889, D.சிவக்குமார். Cell: 94428 22654 என்ற அலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.