நாமக்கல் ஐயப்பன் கோயில் கும்பாபிஷேக விழா

Update: 2023-11-07 15:21 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நாமக்கல் நகரில், மோகனூர் ரோட்டில் பிரசித்திபெற்ற ஸ்ரீ ஐயப்ப சாமி திருக்கோயில், ஸ்ரீ துர்க்கையம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்றுள்ளன. இதையொட்டி கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நேற்றும் இன்று 7ம் தேதி காலை 6 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெற்றது.

காலை 11 மணிக்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள், மோகனூர் காவிரி ஆற்றிற்கு சென்று புனித நீராடி, புனித நீர் கலசங்களை எடுத்துக்கொண்டு, குதிரைகள் முன் வர ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர். மாலை முளைப்பாரி அழைத்தல், வாஸ்து பூஜை, அங்குரார்ப்பணம், ரக்ஷா பந்தனம், கும்ப அலங்காரம் ஆகிய பூஜைகள் முடிவடைந்து, முதல் கால யாக யாக சாலை பூஜை நடைபெற்றது. நாளை 8ம் தேதி புதன் கிழமை காலை 9 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை நடைபெறும்.

மாலை 5 மணிக்கு மூன்றாம் கால யாக சாலை பூஜைகள் நடைபெறும். 9ம் தேதி வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு நான்காம் கால யாக சாலை பூஜைகள் நடைபெறும். மாலை 5 மணிக்கு ஐந்தாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து, மாலை 6 மணிக்கு கோபுர கலசம் வைத்தல் மற்றும் அஷ்டபந்தன மருந்து சாற்றும் நிகழ்ச்சி நடைபெறும். இரவு 8 மணிக்கு வீரமணி ராஜா, அபிஷேக் ராஜா ஆகியோரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும். 10ம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு, 6ம் கால யாகசாலை பூஜைகள் துவங்கி, 8.30 மணிக்கு மகா பூர்ணாஹூதியுடன் நிறைவு பெறும்.

தொடர்ந்து அதிர் வேட்டுகள் முழங்க புனித நீர் அடங்கிய கலசங்கள் எடுத்துச் செல்லப்பட்டு, 9 மணிக்கு கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். பின்னர் 9.30 மணிக்கு ”சுவாமி ஸ்ரீ ஐயப்பன் மற்றும் ஸ்ரீ துர்க்கையம்மன் மூலவர் சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து மகா அபிஷேகம், தச தானம், மகா தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படும். விழாவுக்கான ஏற்பாடுகளை நாமக்கல் ஸ்ரீ ஐயப்பசாமி அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் செய்துள்ளனர்.

Tags:    

Similar News