நாமக்கல் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம்;
நிதிநிலை அறிக்கை பொதுவிளக்க கூட்டம்
நிதிநிலை அறிக்கை பொதுவிளக்க கூட்டம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
ராசிபுரம் நகர திமுக செயலாளர் என்.ஆர் .சங்கர், தலைமை வகித்தார். நகர அவைத் தலைவர் பி. வைத்தீஸ்வரன் வரவேற்புரை ஆற்றினார். இதில், ராசிபுரம் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக வனத்துறை அமைச்சருமான மருத்துவர் மா.மதிவேந்தன் கலந்து கொண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்தும், ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களான ராசிபுரம் நகர் பகுதியில் சாலை வசதி, தினசரி சந்தை அமைத்தல், பட்டாவழங்கல், போதமலை, கெடமலைக்கு சாலை வசதி அமைத்துக் கொடுத்தல் உள்ளிட்டவை குறித்து விளக்கி பேசினார்.
திமுக சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்ட இலக்கிய அணி இணைச் செயலாளர் ஈரோடு இறைவன் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா குறித்தும், நிதி நிலை அறிக்கை குறித்தும் பொதுமக்களிடம் விரிவாக எடுத்துக் கூறி பேசினார்.
இந்த நிகழ்வில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஒன்றிய செயலாளர் கே. பி. ஜெகநாதன், ராசிபுரம் நகர மன்ற தலைவர் மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் முனைவர் ஆர்.கவிதா சங்கர், மாவட்ட பொருளாளர் ஏ.கே .பாலச்சந்தர் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.