முதலீட்டாளர் மாநாட்டில் நாமக்கல் கல்லூரி மாணவி அசத்தல்

சென்னையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் மாணவர்கள் எதிர்காலத்தில் தொழில் முனைவோராக எப்படி பிரகாசிப்பது என நாமக்கல் கல்லூரி மாணவி, விளக்கமளித்து அசத்தினார்.

Update: 2024-01-09 11:42 GMT

சென்னையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் மாணவர்கள் எதிர்காலத்தில் தொழில் முனைவோராக எப்படி பிரகாசிப்பது என நாமக்கல் கல்லூரி மாணவி, விளக்கமளித்து அசத்தினார். 

முதலீட்டாளர் மாநாட்டில் நாமக்கல் டிரினிட்டி கல்லூரி மாணவி அசத்தல்! சென்னை - நந்தம்பாக்கம் - வணிக மையத்தில் தமிழ்நாடு உலகளாவிய முதலீட்டாளர் மாநாடு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 7 மற்றும் 8 தேதிகளில் நடைபெற்றது.

இதில் நாமக்கல் - டிரினிடி மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் 2-ம் ஆண்டு பிஏ ஆங்கிலம் பாடப்பிரிவு மாணவி மு. சந்தியா கலந்துகொண்டு, உயர்கல்வி நிறுவனங்களில் செயல்படுத்தி வரும் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் மாணவர்கள் எதிர்காலத்தில் தொழில் முனைவோராக எப்படி பிரகாசிப்பது? என்பதை பவர் பாயிண்ட் மூலம் சிறப்பாக காட்சிப்படுத்தி விளக்கம் அளித்தார். இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து நாமக்கல் வந்த மாணவி சந்தியாவுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News