பட்ட மேற்படிப்புக்காக நெதர்லாந்து செல்லும் நாமக்கல் கல்லூரி மாணவர்
நெதர்லாந்து பல்கலைக்கழகத்தின் ஸ்காலர்ஷிப் பெற்ற மாணவர் நேதன் அனிருத் பட்டப்படிப்பு படிக்க செல்ல உள்ளார்.
நெதர்லாந்தின் உள்ள உலகப்புகழ் பெற்ற பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பிற்கு நாமக்கல் PGP வேளாண்மை கல்லூரி மாணவர் தேர்வு! நாமக்கல் PGP வேளாண் அறிவியல் கல்லூரி 2013 முதல் நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் கோவையின் அங்கீகாரத்துடன் செயல்பட்டு வருகிறது.
இக்கல்லூரியில் ஏறத்தாழ 725 இளம் அறிவியல் மற்றும் 377 பட்டயப்படிப்பு மாணவர்கள் கடந்த பத்தாண்டுகளில் கல்வி பயின்று கனடா, ஆஸ்திரேலியா, லண்டன், அமெரிக்கா, போன்ற நாடுகளில் மேற்படிப்பு பயின்று வருகின்றனர்.
PGP வேளாண் அறிவியல் கல்லூரியின் 2019 ம் ஆண்டு மாணவர் நேதன் அனிருத், நெதர்லாந்தில் உள்ள உலகின் முதல் நிலை பல்கலைக்கழகமான வேகனிங்கன் பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் முதுகலை வேளாண் பிரிவில் ஊக்கத்தொகையுடன் மாஸ்டர் ரெசிலியன்ட் ஃபார்மிங் மற்றும் ஃபுட் சிஸ்டம்ஸ் படிப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
வேகனிங்கன் பலக்லைக்கழகம் உலக தரவரிசையில் வேளாண் கல்வியில் முதலிடம் வகிக்கின்றது. இப்பல்கலைக்கழகம் முதுநிலை மேற்படிப்பு பயில தேர்வு செய்யப்பட்ட மாணவர் நேதன் அனிருத்தை, PGP கல்வி குழுமங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர்.பழனி ஜி.பெரியசாமி, துணை தலைவர் விசாலாட்சி பெரியசாமி, முதல்வர் முனைவர் கோபால் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.