நாமக்கல் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத் தலைவர் பிறந்தநாள் கொண்டாட்டம்

நாமக்கல் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத் தலைவர் அய்யாவு பிறந்தநாளை முன்னிட்டு அவரது அலுவலகத்தில் பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

Update: 2024-04-26 13:34 GMT
ஆள் உயர மாலை அணிவிப்பு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சங்கத்தின் கௌரவ செயலாளரும் மற்றும் நாமக்கல் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத் தலைவருமான அய்யாவு பிறந்தநாளை முன்னிட்டு அவரது அலுவலகத்தில் பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

ஆள் உயர மாலை அணிவித்து பிறந்தநாள் கேக் வெட்டி அனைத்து வழக்கறிஞர்களும் கேக்கினை ஊட்டி மகிழ்ந்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்த நிகழ்வில் சக வக்கீல்கள், அலுவலக ஊழியர்கள் மாலை, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். விழாவில் வக்கீல்கள், அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றனர்.

முன்னாள் அதிமுக அமைச்சரும், குமாரபாளையம் எம்.எல்.ஏவுமான தங்கமணியை அவரது இல்லத்தில் சந்தித்து வழக்கறிஞர் அய்யாவு வாழ்த்து பெற்றார்.

Tags:    

Similar News