நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் வேண்டுகோள்
நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் இன்று (21.03.2024) மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப தலைமையில் மக்களவைத் தேர்தல் –2024 முன்னிட்டு”தேர்தல் பருவம் - தேசத்தின் பெருமிதம்” என்ற தலைப்பில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 300-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட பிரமாண்டமான மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அதிநவீன மின்னணு வாகனத்தில் தேர்தல் விழிப்புணர்வு பாடல்கள், குறும்படங்களை 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் திரையிடும் வகையில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முன்னதாக, உலக வன தினத்தை முன்னிட்டு, நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் மரக்கன்றுகளை நட்டு தேர்தல் விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டார்.