நாமக்கல் திமுக கூட்டணி வேட்பாளர் மனு தாக்கல்

இந்தியா கூட்டணி சார்பில் நாமக்கல் மக்களவை தொகுதியில் போட்டியிடும் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் மாதேஸ்வரன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

Update: 2024-03-25 08:29 GMT

இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில், நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் வேட்பாளர் மாதேஸ்வரன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் உமாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது நாமக்கல் திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான K.R.N. ராஜேஸ்குமார், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர். ஈஸ்வரன், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News