நாமக்கல் பிரபல டாக்டர் பாஜகவில் இணைந்தார்

புதிதாக அரசியலுக்கு வர விரும்புபவர்கள் கூட தற்போது பாஜகவில் இணைந்து வருகின்றனர்.

Update: 2024-03-08 07:13 GMT

மருத்துவர் சிவகுமார்

தற்போது தேர்தல் பரபரப்பு ஆரம்பித்து விட்டது எனலாம்.... இனி... நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணம் அரசியல் காட்சிகள் அரங்கேறும். தமிழகத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில், பாஜகவானது தமிழகத்தில் உள்ள கட்சிகளுக்கே சவால் விடும் வகையில் வளர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. பாஜகவின் வளர்ச்சியால் மற்ற கட்சிகளில் உள்ள முக்கியமான நிர்வாகிகள் மற்றும் புதிதாக அரசியலுக்கு வர விரும்புபவர்கள் கூட தற்போது பாஜகவில் இணைந்து வருகின்றனர்.அந்த வகையில் நாமக்கல் நகரில் பிரபலமான மருத்துவர் சிவகுமார் (M.M.மருத்துவமனை) தன்னை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்து கொண்டார். பாரதிய ஜனதா கட்சியின் நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் N.P.சத்தியமூர்த்தி இல்லத்திற்கு நேரில் சென்று மருத்துவர் சிவக்குமார் பாஜகவில் இணைந்தார். அவருக்கு பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில விவசாய அணி செயலாளர் வி.கே.டி ராதிகா உடனிருந்தார்.
Tags:    

Similar News