நாமக்கல்: அரசு மகளிர் கல்லூரியில் இன்று சிறப்பு கலந்தாய்வு!

2024 - 2025 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு - சிறப்பு இட ஒதுக்கீடு மாணவியர் சேர்க்கை இன்று காலை 9.30 மணிக்குத் தொடங்குகிறது.

Update: 2024-05-29 01:33 GMT

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரி

நாமக்கல் திருச்சி சாலையில் உள்ள நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 2024 - 2025 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு - சிறப்பு இட ஒதுக்கீடு மாணவியர் சேர்க்கை இன்று (மே-29) புதன்கிழமை காலை 9.30 மணிக்குத் தொடங்குகிறது. சிறப்பு இட ஒதுக்கீடு மாணவியர் சேர்க்கை அனைத்துப் பாடப் பிரிவுகளுக்கும் நடைபெறும்.

இணைய தளம் மூலம் விண்ணப்பம் செய்த அனைத்து மாற்றுத் திறனாளி மாணவியர், விளையாட்டு வீரர்கள், முன்னாள் இராணுவத்தினர் மகள், ஆதரவற்றோர், தேசிய மாணவர் படை, அந்தமான் நிக்கோபார் தமிழர் முதலானோர் இன்று (மே-29) காலை 9.30 மணிக்குக் கல்லூரியில் நடைபெறும் மாணவியர் சிறப்பு இட ஒதுக்கீடு சேர்க்கைக் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம். மேலும், முதல் கட்டப் பொதுக் கலந்தாய்வு வருகிற ஜூன் மாதம் 10 முதல் 14 வரை நடைபெறும். இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்த மாணவிகளுக்குக் கல்லூரியிலிருந்து தொலைபேசி,மின்னஞ்சல், SMS மற்றும் வாட்ஸ்அப் மூலமாக தகவல் தெரிவிக்கப்படும் என கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News